WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 12, 2016

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல் எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.