உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன; இதற்கு வரும், 17ம் தேதி முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பலருக்கு தகுதி இருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.