WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 11, 2016

மதிய உணவுக்கு முன் பள்ளிகளில் யோகா கட்டாயம்.


பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
பி.பென்ஜமின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வியின் கொள்கை விளக்கக் குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது:- யோகா என்பது மனம், உடல், ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும். பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவும் யோகப் பயிற்சி உள்ளது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு: பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான கட்டடம், சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, பாதுகாப்பான மின் இணைப்புகள், இருக்கை, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.  இதன்படி, ஒவ்வொரு சுயநிதி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் உள்ளடக்கிய 5 உறுப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வாரம் ஒருமுறை பள்ளி வேலை நாளொன்றில் பள்ளியைப் பார்வையிட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வர். அவர்கள் ஆய்வு செய்த விவரங்களைப் பள்ளி பதிவேட்டில் பதிவு செய்வர். குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை பள்ளி நிர்வாகம் நிறைவு செய்துள்ளதா என்பதை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் ஆய்வின்போது உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.