WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 25, 2016

10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017
மார்ச்சில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது, பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8 வரை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும். பதிவுக்கான விண்ணப்பங்களை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.