WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 26, 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தகவல்.

``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,
ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.