Thursday, September 1, 2016
ஆதிதிராவிட பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின டிரைவர்கள், சுய வேலைவாய்ப்பு பெற, 960 டிரைவர்களுக்கு, கனரக வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தாட்கோ சிறப்பு மைய திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச, எழுத, 11 மாத பயிற்சி அளிக்கப்படும்; இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய சிறப்பு திட்ட நிதியில் இருந்து, 34 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.