WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 16, 2016

பி.எட்., 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு.

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, 670 தனியார் கல்லுாரிகளிலும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும், கடந்த மாதம் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது. அரசின் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், நிரம்பாத காலி இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நேற்று துவங்கியது; இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், அனைத்து தனியார், பி.எட்., கல்லுாரிகளிலும், இன்றுடன் மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, நேற்று மாலை, திடீர் அறிவிப்பை வெளியி ட்டுள்ளது; இதனால், தனியார் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 'எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென மாணவர் சேர்க்கையை நிறுத்த உத்தரவிட்டால், கல்லுாரிகளை எப்படி நடத்துவது; மாணவர் சேர்க்கைக்கு, மேலும், இரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.