WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 28, 2016

தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் - காலாண்டு விடுமுறை 'கட்'.

ஊராட்சிகளில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு
காலாண்டு விடுமுறை, 'கட்' ஆனது. உதவியாளர் நிலையில் உள்ளோரை ஊராட்சி வார்டு பதவிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் பற்றாக்குறை உள்ளதால், அந்தந்த பகுதி ஆசிரியர்களை உதவி தேர்தல் அதிகாரியாக நியமித்தனர். மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அக்.,2 வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டது. ஆனால், அக்., 3 வரை வேட்பு மனு பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்கூட்டியே நியமன ஆணை வழங்கிய போதிலும், திடீரென தேர்தல் தேதி அறிவித்ததால் விடுமுறைக்கு வெளியூர் சென்றோர் அவசர, அவசரமாக ஊராட்சிகளுக்கு வந்தனர். சில ஊராட்சிகளில் வேட்புமனு வாங்க சரியான இடவசதியும் இல்லை. வசதி இல்லாத இடங்களில் ஓட்டுச்சாவடி உள்ள பள்ளிகளில் அமர்ந்து வேட்புமனுக்களை வாங்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அவர்கள்,' விடுமுறையும் போச்சு; வசதியும் இல்லை' என, புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.