WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 15, 2016

பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை.

நான்கு மாதமாக பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என, பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்மாபிரியதர்ஷன் வரவேற்றார். செயலாளர் ஜெகதீஸ்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் நிறுவனர் மாயவன், மாநிலத் தலைவர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா பங்கேற்றனர். 2010 பின்பு பணிமூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் எழுத தேவையில்லை எனவும், அரசு பள்ளி ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத நிர்பந்தம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தல். மாவட்டக் கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள பள்ளி உதவி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.