WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 28, 2016

'சி.பி.எஸ்.இ., ரிசல்ட்' தாமதம் : உயர் கல்வி சேர்வதில் சிக்கல்.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல், மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா
போன்ற, மாநில அளவிலான பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகின்றன. சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தான் வெளியாகிறது. சி.பி.எஸ்.இ., மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் உடனடி துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியாகின்றன. அதற்குள், அனைத்து இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதால், பல மாணவர்கள், கல்லுாரிகளில் சேர முடிவதில்லை. இவர்கள், காத்திருந்து, அடுத்த ஆண்டில் தான் சேர வேண்டி உள்ளது. இந்த பிரச்னை குறித்து, சேலத்தில் நடந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து, அமைப்பின் தலைவர், மனோகரன் கூறுகையில்,''சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால், மாணவர்கள் பலர், உயர் கல்வியில் சேர முடிவதில்லை. சிக்கலுக்கு தீர்வு காண, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகளை, தாமதமின்றி வெளியிட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.