WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 18, 2016

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லஞ்சமா: புகார் செய்யலாம்

கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை பெற, இடைத்தரகர்களை அணுக வேண்டாம். மாணவர் கல்வி உதவித்தொகை வழங்கவும், அங்கீகாரம் வழங்கவும் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்களை, சி.பி.எஸ்.இ., தலைவருக்கு, chmn-cbse@nic.in என்ற இ - மெயில் முகவரிக்கும், தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு, srana.cbse@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.