மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல், 'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. சில
பள்ளிகளில் மட்டும் பெயரளவில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தயாரிக்கின்றன.
கோவை மாவட்டத்தில், சிறுவர் கலா மன்றத்தின் சார்பில், முதலாம் பருவ தேர்வுக்கான ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடக்கும் முன், விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''வினாத்தாளை வெளியிட்டு தேர்வை நடத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் வெளியே தெரியாமல் போய்விடும். கடந்த ஆண்டும் இதுபோல தேர்வு நடந்தது. இனிமேலாவது, முறைப்படி வினாத்தாளை பாதுகாத்து தேர்வுகளை நடத்த வேண்டும்,'' என்றார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.