WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 20, 2016

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு.

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில்
உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது. செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட் தேர்வை நடத்த வேண்டும் என, வழக்கு தொடர, நெட், செட் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதனால், 10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது; அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ள

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.