ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக வழங்கும், 'ஜியோ' சிம் கார்டுகளுக்கு, கிராக்கி அதிகரித்துள்ளதால், முறைகேடாக, 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில், 'ஜியோ' சிம் வாங்குவோருக்கு, மூன்று மாத இலவச அழைப்பு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சலுகை அறிவித்த, 26 நாட்களில், 1.6 கோடி சிம்கார்டுகள் விற்கப்பட்டு உள்ளன. மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை பயன்படுத்தி, இலவச சிம்கார்டை, சில முகவர்கள், 250 ரூபாய் வரை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'ஜியோ' சிம் கார்டு வாங்கியோர் கூறியதாவது: இலவச சிம் கார்டு பெற, '4ஜி' வசதி உள்ள மொபைல் போனில், சில வழிமுறைகளை கையாண்டால், 'பார்கோடு' எண், திரையில் தெரியும். அதை, ரிலையன்ஸ் ஸ்டோரில் காட்டி, அங்குள்ள கருவியில், நம் கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஆதார் விபரங்கள் திரையில் தோன்றும்; பின், அடையாள எண் ஒதுக்கப்பட்டு, சிம் தரப்படும்.ராயபுரத்தில் உள்ள ஒரு கடையில், எனக்கு ஒதுக்கப்பட்ட எண்ணை பயன்படுத்தி, வேறு ஒருவர், சில நிமிடங்களில், சிம்கார்டு பெற்று சென்று விட்டார். முகவர்கள், மர்ம நபர்களுக்கு இடையே உள்ள தொடர்பே, மோசடிக்கு காரணம்.
தண்டையார் பேட்டையில் உள்ள, ஒரு கடையில், 250 ரூபாய்க்கு, 'ஜியோ' சிம் விற்கின்றனர். '100 ரூபாய்க்கு, ஜியோ சிம் வேண்டுமா' என கேட்டு, 'வாட்ஸ் ஆப்'பில் பலர் வலை வீசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். 'இது போன்ற மோசடி புகார் ஏதும் வரவில்லை; விசாரணை நடத்துவோம்' என, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.