தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்
தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, 17.8.16 முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 7.9.16ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவோர் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பட்டம் பெற்றவர்கள் போட்டித் தேர்வு எழுத தகுதி உடையவர்கள்.
மொத்தம் உள்ள 192 பணியிடங்களில் சிவில் 24, மெக்கானிக் 22, இஇஇ 19, இசிஇ 22, இஐஇ 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 19, உலோகவியல் 1, கணக்கு 25, ஆங்கிலம் 19, இயற்பியல் 21, வேதியியல் 18 பிரிவுகளில் பணியில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில், 113 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மொத்தம் 49 ஆயிரத்து 450 பேர் போட்டி தேர்வு எழுதுகின்றனர். போட்டித் தேர்வு எழுத வரும் நபர்கள் காலை 9 மணிக்கே தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும். 9.30 மணிக்கு பிறகு வருவோர் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அறைக்குள் கால்குலேட்டர், கைக்குட்டை, ஆகியவற்றை எடுத்துவரக்கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
13 இடங்களில் தேர்வு மையம்
அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு நடப்பதை அடுத்து, சென்னையில் 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் மேனிலைப்பள்ளி, பர்கிட் சாலையில் உள்ள சாரதா வித்யாலயா, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளி, வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள வித்யோதயா பள்ளி உள்பட 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.