WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 27, 2016

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கன
மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தீபாவளியான 29ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ள கியான்ட் புயல் வலுவிழந்து வருகிறது. கியான்ட் புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.