WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 24, 2016

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன.

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நி
லையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.