'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிகமாக, சில பள்ளிகள் வசூலிப்பதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன. பல பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., புதிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி உத்தரவுப்படி, துணை செயலர், ஜே.பி.சதுர்வேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அனைத்து பள்ளிகளும், தங்களின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி கட்டண விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், அக்., 31க்குள் வெளியிட வேண்டும்; தங்கள் பள்ளி இணையதளத்திலும், இந்த தகவலை வெளியிட வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.