Sunday, October 23, 2016
உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம்; கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு!
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., பி.பி.எஸ்., பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.
மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.