WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 9, 2016

விடைத்தாள் எழுதும் முறை : வழிகாட்டுமா தேர்வு துறை?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த காலாண்டு
தேர்வில், விடைத்தாளில் பதில் எழுதுவது குறித்து, பள்ளிகளில் பல வழிமுறைகளை கற்று கொடுத்துள்ளனர். 'விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், பெரிய எழுத்துக்களால் எழுத வேண்டும். நீல நிற பேனாவை பயன்படுத்த வேண்டும்; கருப்பு வண்ண, 'ஸ்கெட்ச்' அல்லது பேனாவால், முக்கிய பாகங்களை கோடிட்டு காட்ட வேண்டும். விடைத்தாளின் பின்பக்கத்திலுள்ள, செய்முறை பயிற்சி பக்கத்தில், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; அந்த பக்கம் கணக்கில் கொள்ளப்படாது' என, வழிமுறைகள் கூறப்பட்டு உள்ளன. இதற்கிடையில், விடைத்தாளில் கோடுகள் போடலாமா; முக்கிய பகுதிகளை, வண்ண பேனா அல்லது கருப்பு பேனாவால் குறிக்கலாமா என, பெற்றோர் குழப்பமடைந்து உள்ளனர். மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் வழிமுறைகள், பொதுத்தேர்வில் தடை செய்யப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 'தற்போதே விடைத்தாளில் எழுதும் முறை பற்றியும், செய்யக்கூடாதவை பற்றியும், அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.