WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 15, 2016

மாணவனை வகுப்பறையில் பூட்டிய சம்பவம் : கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.


பல்லாவரம் அருகே, இரண்டாம் வகுப்பு மாணவனை, வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த, பொழிச்சலுார், மல்லிமா நகரில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு, 19 மாணவர்கள் படிக்கின்றனர்; இரண்டு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.நேற்று முன் தினம் மாலை, இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜான்சன், 7, என்ற மாணவனை, வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும், நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினர்.மாணவனின் தாய் முத்துலட்சுமி, ஆசிரியை கள் தனலட்சுமி, குளோரி ராஜாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது, தலைமை ஆசிரியர் அறை கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டட பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தண்ணீர் குடிக்க வகுப்பறையை பயன்படுத்துவதால், அந்த அறையை பூட்டாமல் விட்டுள்ளனர். அப்போது, சக மாணவர் ஒருவர், அந்த அறையை பூட்டியதாக தெரிகிறது. ஜான்சன் வகுப்பறையில் துாங்கி கொண்டிருப்பதை கவனிக்காமல் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. மகன் வீட்டிற்கு வராததால், தாய் முத்துலட்சுமி பள்ளிக்கு சென்று தேடியுள்ளார். பூட்டிய அறைக்குள் மகன் இருப்பதை அறிந்ததும், பூட்டை உடைத்து, ஜான்சனை அழைத்து சென்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.