தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ புத்தகம் கிடைக்காமல், பெற்றோர்
அவதிப்படுகின்றனர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 1ம்
வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவங்களாக புத்தகங்கள் பிரித்து வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில், இலவசமாக புத்தகங்கள் தரப்படுகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகள் மூலம் மொத்தமாக வினியோகம் செய்யப்படும் என, தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம் தெரிவித்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பருவ புத்தகங்களையும் வினியோகிப்பதில், தொடர்ந்து குளறுபடி ஏற்படுகிறது.
பாட நுால் கழகத்தில், மொத்தமாக பதிவு செய்யும் தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்கள் அனுப்புவதில், பல நாட்கள் தாமதமாகின்றன. அதனால், பாட நுால் கழகத்தில், நேரடியாக புத்தகங்களை வாங்கிக் கொள்ள, பெற்றோரை, பல பள்ளிகள் அறிவுறுத்துகின்றன. இதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள விற்பனை மையத்திலும், மாவட்ட விற்பனை மையங்களிலும், பெற்றோர், நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறுகையில், 'கடைகளில் புத்தகங்களை வாங்க முடியவில்லை என்பதால், பாடநுால் கழக மையங்களில், நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டி உள்ளது. எனவே, பருவ புத்தகங்கள் வினியோகம் செய்யும் போது, கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.