WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 30, 2016

'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்.


தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இதன்படி,
கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில், செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் மோகனுார் ஒன்றியத்தில் பரளி ஊராட்சி நடு நிலைப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஸ்மார்ட் வகுப்புக்கு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, தலைமையாசிரியை சாந்தி கூறுகையில்,'''ஸ்மார்ட் வகுப்பில், 'எல்.இ.டி.,' திரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், தமிழ், ஆங்கில பாடங்களை, மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். ஆன் - லைன் மூலம், இணையதள பாடங்களையும் மாணவர்களுக்கு திரையில் காட்டுகிறோம். இதற்கு பெற்றோரும் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.