WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 31, 2016

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம்; புதிய அரசாணை எதிர்பார்ப்பு!


பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட
வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது. இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.