வகுப்பில் அலைபேசி பயன்படுத்துவதை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால் அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளில் அலைபேசி பயன்படுத்துவதால் பணி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வகுப்புகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
அவற்றை எடுத்துச் சென்றாலும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றுவதில்லை.
சமீபத்தில், ஈரோடு மாவட்டத்தில் வகுப்பு நேரத்தில், ஆசிரியர்களை அலைபேசியில் அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆய்வு செய்தனர். அலைபேசியில் பேசிய சில ஆசிரியர்களுக்கு &'மெமோ&' கொடுக்கப்பட்டு உள்ளது.
இதே முறையை மற்ற மாவட்டங்களிலும் பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.