WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 25, 2016

அகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள் முடிவு.

அகவிலைப்படி, சம்பளக்குழு அமைக்க கோரி தமிழகத்தில் ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை (அக்., 26) ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மாநில செயலாளர் செல்வம் மதுரையில் கூறியதாவது: 'புதிய சம்பளக் குழுவை மத்திய அரசு அமைத்ததும், மாநில அரசும் அமைக்கும்' என முதல்வர் ஜெ., வாக்குறுதி அளித்தார். மத்திய அரசு ஏழாவது சம்பளக்குழுவை அமைத்து விட்டது; வாக்குறுதி அளித்தபடி, தமிழகத்தில் எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் ௨௦௧௬ ஜன.,௧ முதல் வழங்க வேண்டும். ஜனவரி, ஜூனில் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். ஜூன் முதல் அகவிலைப்படி வழங்கப்படவில்லை. எனவே, மாநில செயற்குழு முடிவின்படி ௧,௦௦௦ அலுவலகங்கள் முன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.