WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 8, 2016

விஜயதசமி 'அட்மிஷன்' : மழலை பள்ளிகள் ஆயத்தம்.

ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது
வழக்கம். அதற்காக, 'பிளே ஸ்கூல்' எனப்படும், மழலையர் பள்ளிகளில், சிறப்பு சேர்க்கை முகாம் நடத்தப்படும்; அதிக கட்டணமும், நன்கொடையும் பெற்று, குழந்தைகளை சேர்க்கின்றனர். இதுவரை பிளே ஸ்கூல்களுக்கு, கல்வித் துறை சார்பில், அங்கீகாரம் வழங்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இரு மாதங்களாக, அங்கீகாரத்திற்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன. ஆனாலும், பள்ளிகள், அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் தீவிரமாக உள்ளன. விஜயதசமியில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளில், 2017 மார்ச் வரை, எவ்வளவு கட்டணம் பெறப்படுகிறது என்பதை, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வின் முடிவில், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகளை, மூட முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.