Thursday, November 17, 2016
சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்.
'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.