பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் ரா.வீரக்குமார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை http:www.dge. tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த இணையதள முகவரிக்குள் சென்றவுடன் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் திரையில் தெரியும் குறியீட்டினை அதிலுள்ளது போன்றே பதிவு செய்ய வேண்டும். திரையில் தோன்றும் மதிப்பெண் சான்றிதழை பின்னர் நகல் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மூலமாக நவ.4 பிற்பகல் 3 மணி முதல் நவ.7ஆம் தேதி வரை நேரில் சென்று மறுகூட்டலுக்கான கட்டணத்தை பணமாக செலுத்தி ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இருதாள் கொண்ட (தமிழ், ஆங்கிலம்) பாடத்துக்கு ரூ.305, ஒருதாள் கொண்ட பாடத்துக்கு ரூ.205 வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ஒப்புகைச் சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிய முடியும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.