WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 14, 2016

பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு.

'துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசுத்துறையில், 29 துணை கலெக்டர்கள், 39 முதல் நிலை, டி.எஸ்.பி.,க்கள், எட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் எட்டு மாவட்டங்களில், தீயணைப்பு அதிகாரி என, குரூப் - 1 பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, பிப்., 19ல், முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது; டிச., 12ல் முடிகிறது. விண்ணப்ப கட்டணத்தை, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆன்லைன் வங்கி கணக்கு மூலமும் செலுத்தலாம். கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில், தொழில்நுட்ப பிரச்னைகள் எழலாம். இதனால், விண்ணப்பங்களை கடைசி நாளில், சமர்ப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இதற்கான தகுதி உட்பட, மேலும் விபரங்களை, 044 - 2533 2855, 2533 2833 மற்றும் 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.