WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 9, 2016

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு எங்கெங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது தெரியுமா?.

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு அத்தியாவசிய இடங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலக்களிக்கப்படும் இடங்கள் குறித்து
அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அது குறித்த விவரங்கள்: - அரசு மருத்துவமனை - பெட்ரோல் பங்குகள் - மருந்தகங்கள் - ரயில், விமான நிலையங்கள் - இடுகாடு உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 11 வரை பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், அஞ்சலங்கள் ஆகியவற்றில் அடையாள அட்டையுடன் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். சர்வதேச விமான நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள சிறப்பு கவுண்டர்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ500, ரூ1,000 நோட்டுகளை எங்கு மாற்றிக்கொள்ளலாம் ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று (நவம்பர் 8) நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொது மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம். வங்கிகளில் நோட்டுக்கள் எற்றுக்கொள்ளாவிடில் ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் நாளை ஒரு நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நவ.10-ஆம் தேதி முதல் தங்களிடம் உள்ள நோட்டுக்களை வங்கிகளில், அஞ்சலகங்களில் ஒப்படைக்கலாம். வங்கிகளில் நோட்டுகளை ஒப்படைக்க டிச 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் எப்போது? புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் எப்போது என்பது குறித்தும் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. புதிய பாதுகாப்பு வசதிகளுடனான 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் உரிய அடையாள அட்டையை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கொண்டுசெல்லும் பொருட்டு வங்கிகளுக்கு நவம்பர் 9 ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக போதிய ரூபாய் நோட்டுகள் தயாராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.