'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ.,
எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும். கடும் நடவடிக்கை : மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது.இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.