WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 11, 2016

பள்ளி கல்வி முன்னேற்றம் குறித்து தமிழகம் - கொரியா ஆலோசனை.

தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர். தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சென்னையில் கருத்து பரிமாற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், கொரியன் குடியரசு துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், ''தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தயார்,'' என்றார். பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று, தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.