Monday, November 14, 2016
மாணவர் விடுதிகளில் காப்பாளர்கள் இல்லை.
பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், 400க்கும் மேற்பட்ட காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகம் முழுவதும், 1,315 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் உள்ளன. இதில், 82 ஆயிரத்து, 164 மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். ஒவ்வொரு விடுதிக்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற காப்பாளர் நியமிக்கப்படுவார். மேலும், சமையலர், காவலாளியும் நியமிக்கப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக, விடுதிகளில் காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ஒரு காப்பாளரே, மூன்று விடுதிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, சமையலர், காவலாளி பணியிடமும் காலியாக உள்ளது.
இது குறித்து, விடுதி மாணவர்கள் கூறியதாவது: விடுதிகளில், 400க்கும் மேற்பட்ட காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் அடிப்படை வசதி, கல்வி பாதிப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, விடுதி காப்பாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல, சமையலர், காவலாளி பணியிடமும் நிரப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.