WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 1, 2016

அகவிலைப்படி உயர்வு எப்போது?


ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழாவது
ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், இரண்டு சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும், அகவிலைப் படியையும் உயர்த்த வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு தாமதம் செய்வதாக தெரிகிறது. இந்நிலையில், அகவிலைப் படியை மட்டுமாவது உடனே உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''இந்த விஷயத்தில், மத்திய அரசு போல் தமிழக அரசும் செயல்படாமல், அகவிலைப்படியை ஆறு சதவீதமாக உயர்த்தி, உடனே வழங்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.