Friday, November 18, 2016
மாணவர்கள் குறைகளை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.
மாணவர்கள் தங்களது குறைகளையும் பிரச்சினை களையும் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளி களிலும் மாணவ, மாணவிகள் தங்கள் குறைகள், நிறைகள் மற்றும் பிரச்சினைகளைத் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பள்ளி ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளும் இணை இயக்குநர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ள விவரத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.