WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 14, 2016

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஆறாவது சம்பளக்குழு சம்பளத்தில் இடைநிலை ஆசிரியருக்கு ஏற்பட்ட இழப்பை நீக்க வேண்டும். ஏழாவது சம்பளக்குழு அமைக்க வேண்டும் உள்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் உதவி தொடக்க கல்லி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். செயலாளர் கருமலை முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சத்குருகுமார், கந்தகுமரன், ரமணி, சித்ராதேவி உள்பட பலர் பேசினர். முன்னாள் மாவட்ட தலைவர் மங்களநாதன் நிறைவுரையாற்றினார். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.