WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 3, 2016

போதை தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்.


அரசு பள்ளியில், போதையில் தள்ளாடிய தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின்
தலைமை ஆசிரியர் குணசேகரன். இவர் நேற்று முன்தினம் பள்ளியில், தன் அறையில் மது குடித்தார். போதை தலைக்கு ஏறிய நிலையில், தள்ளாடிபடி வெளியே வந்த அவர், பள்ளி வளாகத்திற்கு வெளியே மது பாட்டிலை வீசியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் குணசேகரனை தட்டி கேட்டனர். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களின் முற்றுகையில் இருந்த தலைமையாசிரியர் குணசேகரனை மீட்டார். பின், மக்களிடம் விசாரித்து, புகார் மனுவை பெற்றார். கல்வித்துறையினரின் விசாரணையில், குணசேகரன் பள்ளியில் மது அருந்தியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிச்சாமி, தலைமையாசிரியர் குணசேகரனை, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.