WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 8, 2016

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை.

* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் * விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் * அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது * வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது * விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது * கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும் * தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது.இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஒரு மொழியில்மட்டும் எழுதலாம் தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது. விதிகளை மீறுவோர், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. தற்போது, எந்த காலம் வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.