தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர் காலிபணியிடங்களை நிரப்பும் முறையில் மாற்றம் தேவை என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது தமிழகத்தில் நிரப்பப்படும் எல்லா பணியிடங்களும் போட்டி தேர்வு வைத்தே நிரப்பப்படுகிறது.ஆனால் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் மட்டும் அரசின் கொள்கை முடிவு என்ற பெயரில் நேரடி நியமனம் மூலம் நடந்து வருகிறது.இதில் மொத்தம் 34 மதிப்பெண் வழங்கப் படுகிறது.கல்விதகுதிக்கு5 முதல் 9 மதிப்பெண் வரையிலும் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்ணும் நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப் படுகிறது.இதில் கல்விதகுதிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள 9 மதிப்பெண் ஆனது முழுக்க முழுக்க செட் நெட் போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறாமல் பி.எச்.டி பட்டம் பெற்றவர்களுக்காகவும், 5 மதிப்பெண் ஆனது பி.எச்.டி பட்டம் பெறாமல் எம்.எஸ்சி உடன் செட் நெட் முடித்தவர்களுக்காகவும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த 4 மதிப்பெண் வித்தியாசம் தமிழகத்தில் மாநில அளவிலான செட் தேசிய அளவிலான நெட் போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை கடுமையாக பாதிப்படையச் செய்து வருகிறது.மேலும் பல்வேறு கல்வி அமைப்புகளும் அரசுக்கு இந்த மதிப்பெண் பங்கீடு முறையில் மாற்றம் தேவை என கோரிக்கை வைத்து வருகிறது.இந்த மதிப்பெண்கள் முறையால் 95 சதவீதத்திற்கும் மேல் பி.எச்.டி முடித்தவர்களே பலன் பெற்று வருகிறார்கள் .செட் நெட் தேர்ச்சிப்பெற்றவர்கள் கண்டிப்பாக பி.எச்.டி படித்தால் மட்டுமே அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியினை பெறமுடியும் என்ற நிலையை மேற்குறிப்பிட்ட மதிப்பெண் முறையின் வாயிலாக திமுக தலைமையிலான அரசு அறிமுக படுத்தி இருந்தது.கடந்த திமுக தலைமையிலான அரசு கொண்டு வந்த அதே முறையினை தற்போதைய அதிமுக தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது.இதனை இந்த தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.மேலும் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் இது போன்று பி.எச்.டி முடித்தவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண் வழங்கும் முறை இருந்து வருகிறது. எனவே இந்த முறையில் மாற்றம் செய்ய அரசு முன் வர வேண்டும். மேலும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பினை அரசு கல்லூரி நிரந்தர பெண் உதவி பேராசிரியர் எடுப்பது போல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுமதி தராமல் இருந்து வருகிறது.இது சம்பந்தமாக அரசிடம் தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக கேட்டதற்கும் இது அரசின் கொள்கை என அரசு பதில் கூறிவருவது அரசின் அடாவடித்தனமான கொள்கை முடிவையே காட்டுகிறது.அதுமட்டுமல்லாமல் சம வேலை சம ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் சமீப கால தீர்ப்பையாவது அரசு மதிக்குமா இல்லை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை கொள்கை முடிவு என்ற தாரக மந்திர வார்த்தைகளால் மிதிக்குமா என தெரியவில்லை என்று தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
Thursday, November 17, 2016
அரசு கலை கல்லூரி விரிவுரையாளர் நியமன முறையில் மாற்றம் தேவை என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.