Sunday, November 20, 2016
வினாத்தாள் கட்டணத்தில் ஆசிரியர்கள் வசூல்?
வினாத்தாள் கட்டணம் எனும் பெயரில், அரசு பள்ளி மாணவர்களிடம் வசூல் வேட்டை நடத்துள்ளது குறித்து, கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அந்த ஒன்றியத்திற்குள் வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 'இத்தேர்விற்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இருப்பினும், கோவை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆக., மாதம், முதல் பருவத்தேர்வுக்கு, வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை தொடக்கக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கையின் பேரில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தொடக்கக் கல்வித் துறை, இந்த வசூல் வேட்டையை அரங்கேறியுள்ளதாக கலை ஆசிரயர்கள் நலச்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும், வினாத்தாள்கள் சிறுவர் கலா மன்ற அலுவலகத்தில் அச்சடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்னரே கிடைக்கும் வகையில் தனியார், 'ஜெராக்ஸ்' கடைகளில் வினியோகிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு, கோவை மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர், 'தலைமையாசிரியர் மூலம் பாதுகாப்பான முறையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலம், மாற்று வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தப்பட்டது' என பதிலளித்துள்ளார். இதன்மூலம், வினாத்தாள் 'லீக்' ஆனது நிரூபணமாகியுள்ளது.
கலை ஆசிரியர் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான வினாத்தாள்கள் சிறுவர் கலா மன்றத்தில் அச்சிடப்பட்டு, பள்ளி வாரியாகவும், வகுப்பு வாரியாகவும் எவ்வித சீலும் இல்லாமலே, வினியோகிக்கப்பட்டுள்ளன. இதுவே வினாத்தாள்கள் விலைபோக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், மாற்று வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்தப்பட்டதாக, மாவட்ட தொடக்கல்வி அலுவலர் கூறியுள்ளது வினாத்தாள், 'லீக்' ஆனதை அம்பலமாக்கியுள்ளது. தொடக்க கல்வித்துறையில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்காததே இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.