WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 11, 2016

கல்வி கட்டண வசூலில் சிக்கல் : பள்ளி, கல்லூரிகள் கெடுபிடி.

'கல்வி கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்' என, பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில், மூன்றாம் கட்ட கல்வி கட்டணமும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இரண்டாம் கட்ட கல்வி கட்டணமும், தற்போது பெறப்படுகிறது. நவ., 1 முதல், கல்வி கட்டணம் வசூலிக்கும் பணி துவங்கியுள்ளது. பல பள்ளிகளில், 'இன்னும், ஐந்து நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவிப்பால், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வரவேண்டாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்த வேண்டுமென்றும், பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் நெருக்கடி கொடுப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில பள்ளி, கல்லுாரிகள், ஆன்லைனில், கட்டணம் வசூலிக்கின்றன. இதேபோல், அனைத்து பள்ளி, கல்லுாரிகளும், ஆன்லைன் முறையில் பணம் பெற்று கொள்ள வேண்டும். 'டெர்ம் பீஸ்' என்ற, பருவ கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.