WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 9, 2016

'குரூப் - 1' தேர்வுக்கு கூடுதல் அவகாசம்.

'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நான்கு நாள் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 1' பதவிகளான,
துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., போன்றவற்றில், 85 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல், தேர்வு நடத்துகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 9ல் துவங்கி, நேற்றுடன் முடிவதாக இருந்தது. ஆனால், 'நடா' புயல், பண தட்டுப்பாடு, ஜெயலலிதா மறைவை ஒட்டிய விடுமுறை போன்றவற்றால், விண்ணப்ப பதிவில், தேர்வர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரினர். இது குறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'குரூப் - 1 தேர்வுக்கு, டிச., 12 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது; தேர்வு தேதியில் மாற்றம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.