இன்று மாலை முதல், 36 மணி நேரத்திற்கு, ‛வர்தா' புயலால் கனமழை உண்டு' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛வர்தா' புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: டிச.,11ம் தேதி (இன்று) முதல், அடுத்த 36 மணி நேரத்திறகு தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், வடக்கு தமிழக கடலோர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும்.
இந்த மழை மெல்ல மெல்ல அதிகரித்து, 7 முதல், 19 செ.மீ., வரை மிக கனமழை முதல் அதி கனமழை வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பெய்ய கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.