WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 25, 2016

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?


'தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை
செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வதில் குழப்பம் இருந்தது. இதனால், 2010 -- 11ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வரன்முறை செய்யவில்லை. மேலும், அவர்களது பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய தேவையில்லை; இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் மட்டும் முடித்தால் போதும்' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.