WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 26, 2016

விடுமுறைக்கு பின் விடுபட்ட தேர்வு.


அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், 7ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும் 9ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு நடப்பதாக இருந்தது. 5ம் தேதி இரவு, முதல்வராக இருந்த ஜெ., இறந்ததால், ஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டு, மூன்று நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நடக்க இருந்த தேர்வு, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், 9ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் அட்டவணையில் அறிவித்தபடி தேர்வுகள் நடத்தப்பட்டன. அனைத்து வகுப்புகளுக்கும், 23ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. 24ம் தேதி முதல், அடுத்த மாதம் 1ம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பள்ளி திறந்த மறுநாளே (3ம் தேதி) விடுபட்ட தேர்வு நடக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.