பசுமையின் மத்தியில் எழில் கொஞ்சும் கிராமத்தின் மத்தியில், தேயிலை எஸ்டேட்டுகளை அரணாக கொண்டு ஒரு பள்ளி செயல்படுகிறது என்றால் அது தாய்முடி முதல்பிரிவு அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியாகும். இந்தப்பள்ளியில் எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் படிக்கின்றனர்.கடந்த, 1959ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் ஆரம்ப காலத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது, 15 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் அவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையான கல்வி இந்தப்பள்ளியில் கற்றுத்தருவது பள்ளியின் பெருமை. மாணவர்களின் எண்ணங்களை வடிவமாக்கி, பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையில், அவர்களை சிறந்த மாணவர்களாக இந்தப்பள்ளி உருவாக்கி வருகிறது என்றால் அது மிகையாகாது.கல்வியால் மட்டுமே ஒரு மாணவன் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதை விளக்கும் வகையில் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களின் வெற்றியில் அழகு பார்க்கும் ஆசிரியர்கள் இந்தப்பள்ளியிலும் உள்ளனர். இப்பள்ளி கடந்த எட்டு ஆண்டுகளில் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதோடு, மாணவர்களே ஆர்வத்தோடு கல்வி பயில வரும் சூழலாகவும் மாறியுள்ளது.மாணவர்களை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே பள்ளியை முன்னேற்றபாதையில், வழிநடத்தி செல்கின்றனர் என்பது பெருமைக்கு உரிய விஷயமாகும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளின் கல்வித்திறன்களை வளர்க்கும் வகையில் ஏ.பி.எல்., மற்றும் எஸ்.ஏ.பி.எல்.,முறையில் அவர்களுக்கு பாடம் சொல்லித்தரப்படுகிறது. இது தவிர மாணவர்களிடையே தனித்திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் பள்ளி வளாகத்திலேயே நுாலகம் இயங்குகிறது.இது தவிர மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நாள் தோறும் யோகாபயிற்சி, கலைஇலக்கியம், நன்னெறிக்கல்வி, விளையாட்டு போன்றவை கற்றுத்தரப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் மேரிமோரா கூறியதாவது: எங்கள் பள்ளியை பொறுத்த வரை தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சிறந்த சிற்பியாக்கி, அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது தான் ஆசிரியர்களின் தலையாய கடமை. எங்கள் பள்ளியை பொறுத்த வரை மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரப்படுவதால் கல்வித்தரமும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.