WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 31, 2016

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. ஏடிஎம்-மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும்போது வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. ஆனால், இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.