Saturday, December 31, 2016
மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எம்.பி.பி.எஸ். முடித்து வெளியேறும் மருத்துவர்களுக்கு "நெக்ஸ்ட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று "நிதி ஆயோக்' அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
அதனடிப்படையில், புதிய மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இந்த மசோதாவை, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக சுகாதாரத் துறை அமைச்சகம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 6-ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.
இதுதவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.