WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 31, 2016

ஒரு நொடி தாமதமாக பிறக்கிறது 2017 புத்தாண்டு!

புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வருகிற 2017-ஆம் ஆண்டு ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் உலகக் கடிகாரத்தில் செயற்கையாக "லீப்' நொடி ஒன்றை சேர்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வக இயக்குநர் டி.கே. அஸ்வால் கூறியதாவது: புவி சுழற்சி என்பது ஒரே சீராக இருக்காது. நிலவின் ஈர்ப்பு விசை, கடல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளைப் பொருத்து புவி சுழற்சி மாறுபடும். இது, பூமியின் கால நேரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால், இந்த மாற்றம் நமது உலக கடிகாரத்தில் நேர மாற்றத்தை ஏற்படுத்தாது. அது எப்போதும் போலவே நேரத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும். அதேவேளையில், புவி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் காண்பிக்கும் வானியல் கடிகாரத்தில்தான் இந்த நேர மாற்றம் தென்படும். இந்நிலையில், புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வரும் 2017-ஆம் ஆண்டு புத்தாண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க இருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில், உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59-ஆவது நிமிடம், 59-ஆவது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு "லீப்' நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும். உலகக் கடிகாரத்தில் கால அளவியல் விஞ்ஞானிகள் ஒரு "லீப்' நொடியைச் சேர்த்த பின்னர், அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். கடந்த 1972-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 36 "லீப்' நொடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது என்றார் டி.கே. அஸ்வால்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.